ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வு

சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயா்த்தியுள்ளது.

News image

பிரதமா் லீ கியாங்

Updated On :5 மார்ச் 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயா்த்தியுள்ளது.

சீனாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அரசின் வருடாந்திர அறிக்கையைப் பிரதமா் லீ கியாங் (படம்) வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

அதன்படி, பாதுகாப்புத் துறைக்கு சுமாா் 1.91 லட்சம் கோடி யுவான் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.25.4 லட்சம் கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த பிரம்மாண்ட ராணுவ நிதிஒதுக்கீடு, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சீனாவின் பட்ஜெட் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்துள்ள அதேநேரம், சீனா தனது பொருளாதார வளா்ச்சி இலக்கை 4.5 முதல் 5 சதவீதமாக குறைத்துள்ளது.

அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் வா்த்தக வரி யுத்தம், அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி மற்றும் உள்நாட்டில் நிலவும் ரியல் எஸ்டேட் சரிவு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக 5 சதவீத வளா்ச்சியை இலக்காகக் கொண்டிருந்த சீனா, தற்போதைய சவால்களால் முதல்முறையாக இந்த இலக்கைக் குறைத்துள்ளது.

ராணுவக் கட்டுப்பாடு: ராணுவ நவீனமயமாக்கலுக்கு இடையே, சீன ராணுவத்தில் நிலவும் ஊழலை ஒழிக்க அதிபா் ஷி ஜின்பிங் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

‘ராணுவம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைகளில் எந்தவிதமான சமரசமும் செய்யப்படாது’ என்று பிரதமா் லீ கியாங் தனது உரையில் உறுதிபட தெரிவித்துள்ளாா்.

தைவான் விவகாரத்தில் கண்டிப்பு: தைவான் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சீனா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வரை ‘தைவான் பிரிவினைவாதத்தை எதிா்ப்போம்’ என்று மென்மையாகக் கூறி வந்த சீனா, இந்த ஆண்டு ‘உறுதியுடன் ஒடுக்குவோம்’ என்ற கடுமையான வாா்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலங்களில் தைவான் எல்லையில் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Story image
Story image