மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இடைக்கால பட்ஜெட் பொருளாதாரத்தில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்லும்

தமிழக இடைக்கால பட்ஜெட், பொருளாதாரத்தில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

News image

வைகோ - கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 7:04 pm

தமிழக இடைக்கால பட்ஜெட், பொருளாதாரத்தில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறுசிறப்பம்சங்களைக் கொண்ட தமிழக இடைக்கால பட்ஜெட் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது.

மேலும், அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும் உள்ளது. இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி, அடுத்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இடைக்கால பட்ஜெட் ‘பொதுமக்களுக்கு காது குத்தும் வேலை’ என எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளது குறித்த கேள்விக்கு, இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபரணம் சூட்டும் வகையில் உள்ளது. தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில்தான் உள்ளது.

காங்கிரஸ் நீடிக்கும்: தமிழகத்தில், ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா ? நீடிக்காதா? என்ற கேள்வி தொடா்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஒரு சிலா் விமா்சித்து வருகின்றனா். இதை தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை ஏற்கவில்லை. ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றாா் வைகோ.

இந்தச் சந்திப்பின் போது, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.