அறிவியல் வளர்ச்சியில் அதிசயத்தக்க முன்னேற்றக் காலத்தில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறைக்கு வேண்டுமானால், ரயில் என்பது போக்குவரத்து வாகனச் சாதனமாகத் தெரியலாம். ஆனால், கடந்த தலைமுறைக்கு ரயில் என்பது வியக்கவும், ரசிக்கவும் வைத்த ஒரு பிரமாண்டம்தான். கரும்புகையை கக்கியபடியே பசுமை வயல் வெளிகள், கரடு முரடான பகுதிகள் என அனைத்து நிலைகளிலும்,
'இஸ்...புஷ்...' என சக்கரங்கள் வித்தியாசமான அச்சில் சுழன்றபடி செல்லும் அழகே.. அழகுதான். ரயிலை வைத்து பெயர் சூட்டப்பட்ட பழைய திரைப்படங்களும் சரி; ரயில் இயக்கத்தை வைத்து இயற்றப்பட்ட திரைப்பாடல்களும் சரி... இன்று கேட்டாலும் ஏதோ ஒருவிதத்தில் ரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது.
அத்தகைய சிறப்புவாய்ந்த ரயில்களின் சர்வதேச கண்காட்சி சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவன வளாகத்தில் மூன்று நாள்கள் அண்மையில் நடைபெற்றது. பார்வையாளர்கள் இலவசமாகவே அனுமதிக்கப்பட்டனர்.
ரயில்கள் பெட்ரோல், டீசல் எரிபொருள் வாகனங்களாகி, தற்போது மின்சாரம், எரிவாயுவில் இயங்கும் வரையிலான ரயில் என்ஜின் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
கண்காட்சியில் வைக்கப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவன ரயில் பெட்டி பாகங்களின் தயாரிப்புகளில் சென்னை ஐ.சி.எஃப். ரயில் பாகங்கள் உற்பத்தி மிக நேர்த்தியாகவும், நவீனமயமானதாகவும் காணப்படுகின்றன.
கண்காட்சியில் சிறப்பு அம்சங்கள்
தொடக்கத்தில் சிறிய தண்டவாளங்களில் ஓடிய ரயில்களின் மாதிரி, தண்டவாளங்களைத் தொடாமல் அந்தரத்தில் பறந்து செல்லும் மின்காந்தப் புல புல்லட் அதிவேக ரயில்கள் மாதிரிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
நவீன மயமான ரயில் உதிரிப்பாகங்கள், அவற்றை ரயில்களில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை விளக்கும் கருத்தரங்குகள் நடைபெற்றன.
நாட்டில் ரயில் பெட்டிகள், ரயில் உதிரிப்பாகங்கள், தண்டவாள சிக்னல் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் அரசு சார்ந்த, தனியார் நிறுவனங்கள் என 125-க்கும் மேற்பட்டவை பங்கேற்றன. இதுதவிர அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ், தென் கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிறுவனங்களும் பங்கேற்றன.
கடந்த காலம் முதல் தற்காலம் வரை மக்களின் ரசனைக்கு ஏற்பவும், வசதி வாய்ப்புகளுக்குத் தக்கவாறும் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள், நாற்காலிகள், கைப்பிடிகள், காற்றாடிகள் என அனைத்துவிதமான ரயில் சார்ந்த உற்பத்திப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சென்னை ஐ.சி.எஃப்பில் தயாரிக்கப்பட்ட சாதாரண ரயில்கள், 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத், அமிர்த பாரத், மெட்ரோ ரயில்கள், ஹைட்ரஜன் ரயில்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
சர்வதேச நாடுகளுக்கு சவால் விடும் வகையிலான தயாரிப்புகள், ஐ.சி.எஃப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிவேக புல்லட் ரயில், சரக்குகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட வந்தே பிரைட் என அதிநவீன தயாரிப்புகளின் மாதிரிகள் பார்வையாளர்களை அசத்தின.
ரயில் இருக்கைகள், ரயில் பெட்டிகளுக்குள் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள், மின்சார சார்ஜர், அபாயச் சங்கிலி, ரயில்களை மிதமாக இயக்க உதவும் சாதனங்கள், ரயில் பெட்டிகளை இணைக்க உதவும் பாகங்கள் உள்ளிட்டவற்றின் விதவிதமான தொழில்நுட்ப வசதிகள் வியப்படைய வைக்கும் வகையில் அமைந்திருந்தன.
மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்படும் தானியங்கிக் கதவுகள் இனி சாதாரண பயணியர் ரயில்கள், அதிவிரைவு ரயில்களில் பயன்படுத்தப்படவுள்ளன. ஆகவே, தானியங்கிக் கதவுகளின் நவீன தொழில்நுட்ப மாதிரி, அதற்கான வடிவமைப்பு எனப் பல அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ரயில் பெட்டிகளின் தானியங்கிக் கதவுகளில் உள்ள சில பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் எதிர்காலத்தில் அமையும் தானியங்கிக் கதவுகளும் காண்போரை வியக்கவைத்தன.
வெளிநாட்டு நிறுவனங்கள் காட்சிப்படுத்தியிருந்தவற்றில் ரயில் பெட்டிகளின் உள்ளே உள்ள பாகங்களே அதிகம் காணப்பட்டன.
ரயில்களில் வேகத்துக்கு ஈடு கொடுத்து படம் பிடிக்கும் கண்காணிப்புக் காமிராக்கள், அதிவேகத்தில் ஓடும் ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தையும் துல்லியமாக படமாகவும், வீடியோ காட்சியாகவும் பதியும் திறன் கொண்டவையாக உள்ளன.
தென் கொரிய நிறுவனம் சார்பில் புல்லட் ரயில் செல்லும் வேகக் கண்காணிப்புச் சாதனமும், இந்திய நிறுவனத்தின் மின்பரிமாற்றம், தகவல் பரிமாற்றத்துக்கான நவீன பாகமும் சர்வதேச அளவிலான ரயில் பாக உற்பத்தி நிறுவனப் பிரதிநிதிகளை அதிகம் கவர்ந்தன.
-வ.ஜெயபாண்டி, படங்கள்: ஆர்.கிருஷ்ணராஜ்.
ஓட்டுநர் இல்லாத ரயில்கள் தயாரிப்பு...
'தற்போது மணிக்கு 120 கி.மீ. செல்லும் ரயில்கள் உள்ள நிலையில், எதிர்காலத்துக்காக 250 கி.மீ. தொலைவு செல்லும் அதிவேக ரயில்களும் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன. நகரப் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஓட்டுநர் இல்லாத ரயில்களும் தயாரிக்கப்படுகின்றன' என்கிறார் சென்னை ஐ.சி.எஃப். மேலாளர் யு.சுப்பாராவ்.
கல்லூரிப் பேராசிரியை சரண்யா
புகைவண்டியாகப் பார்த்து ரசித்த ரயில்கள் தற்போது மின்சாரத்தில் சத்தமில்லாமல் செல்லும் வகையில் வடிவமைப்பில் முன்னேற்றம் கண்டிருப்பதைப் பார்க்கும்போது, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்துக்குச் சென்ற உணர்வு ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

ஐசிஎஃப்-பில் சா்வதேச ரயில் பெட்டிகள் கண்காட்சி: மாா்ச் 12-இல் தொடக்கம்
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

