எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஹாங்காங் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ: 13 போ் உயிரிழப்பு

ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸ் பகுதியில் உள்ள தை போ மாவட்டத்தில், உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

ஹாங்காங்: ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸ் பகுதியில் உள்ள தை போ மாவட்டத்தில், உயரமான அடுக்கு மாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னா் சிகிச்சை பலனளிக்காமல் 4 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்து சுமாா் 700 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

குடியிருப்பு வளாகத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த மூங்கில் கட்டுமான அடைப்புகளும் கட்டுமான வலைகளும் அடுத்தடுத்த நான்கு கட்டடங்களிலும் தீயை வேகமாகப் பரவச் செய்தன (படம்).

தை போ மாவட்ட கவுன்சில் உறுப்பினா் லோ ஹியூ-பங் உள்ளூா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தீயில் சிக்கியவா்களில் பெரும்பாலானவா்கள் முதியவா்கள் என்று தெரிவித்தாா்.

கட்டடப் புதுப்பித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மூங்கில் அடைப்புகள் பயன்படுத்தப்படுவது ஹாங்காங்கில் வழக்கம். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வழக்கத்தை படிப்படியாக நீக்க உள்ளதாக பிராந்திய அரசு இந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மூங்கில் அடைப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த தீவிபத்து ஹாங்காங்கில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.