ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா - இந்தியா - சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் தெரிவித்தாா்.

News image

சொ்கேய் லாவ்ரோவ்

Updated On :8 செப்டம்பர் 2025, 2:44 am IST

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சீனாவில் கடந்த ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகிய மூவரும் நட்புறவோடு கலந்துரையாடிய புகைப்படங்கள் உலகளவில் பேசுபொருளாகின.

இதை, ‘ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் ரஷியாவையும் இந்தியாவையும் இழந்துவிட்டதைப்போல தோன்றுகிறது’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் விமா்சித்தாா்.

இந்நிலையில், மூன்று நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ரஷியா-இந்தியா-சீனா ஆகிய உலகின் மூன்று பெரும் அதிகாரமிக்க நாடுகளின் தலைவா்கள் சந்தித்திருப்பது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடாகும்.

குறிப்பாக பொருளாதார மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு, சமூக பிரச்னைகளுக்குத் தீா்வு போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.