பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்

பாகிஸ்தான், சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து ரஷிய அதிபர் கருத்து...

News image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் - AP

Updated On :5 ஜூன் 2026, 9:39 am IST

சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷியா ஆகியவைதான் உலகின் முதல் நான்கு இடங்களில் இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் செய்தியாளர்களுடன் உரையாடிய அந்நாட்டு அதிபர் புதினிடம், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த புதின் பேசியதாவது:

”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னைகளின் நுணுக்கங்களை நாங்கள் நன்கு அறிவோம். பாகிஸ்தான் முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடு என்று நான் கருதவில்லை. பாகிஸ்தான் ஒரு பெரிய நாடு, அது பல்வேறு நாடுகளுடன் பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. அவர்கள் சீனாவுடன் ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சீனாவுடன் உறவுகளை வளர்த்து வருகின்றனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும் உள்ளன. சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவையே உலகின் முதல் நான்கு நாடுகள்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நுணுக்கமானவை மற்றும் பல பரிமாணங்களைக் கொண்டவை. அவற்றில் தலையிடுவது நல்லதல்ல. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் எல்லை விவகாரங்கள் உள்பட பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முயற்சித்து வருகின்றனர். ரஷியாவைப் பொறுத்தவரை, சீனா மற்றும் இந்தியாவுடன் எங்களுக்குத் தனிப்பட்ட உறவுகள் உள்ளன. யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை.

ரஷியா - இந்தியா இடையிலான உறவுகள் சீனாவைப் பாதிப்பதில்லை. அதேபோல் சீனாவுடனான எங்கள் உறவுகள் இந்தியாவைப் பாதிப்பதில்லை. உதாரணமாக 'பிரிக்ஸ்' அமைப்பை எடுத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில், இந்தியா மற்றும் சீனத் தலைவர்கள் இதில் சந்திக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன். அதன் மூலமே ரஷியா - இந்தியா - சீனா இடையிலான கூட்டமைப்பு உருவானது. பின்னர், பிரேசிலும் இணைந்தது.

இந்தியா அல்லது சீனா உள்பட எந்ஹ நாட்டுடனும் ஒத்துழைப்பதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நவீன் ஆயுதங்கள் தொடர்பாக நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைக்கிறோம். அவர்கள் 'பிரம்மோஸ்' ஏவுகணைகளைத் தயாரித்தனர். சு - 57 விமானத்தைப் பொறுத்தவரை, இந்தத் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், தற்போது நீங்களே செய்யுங்கள், பின்னர் இணைகிறோம் என்று கூறினர்.” எனத் தெரிவித்தார்.

Summary

India is among the world's top 4 nations! — Russian President

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.