பஞ்சாபில் வெள்ளம்: படகு கவிழ்ந்து 10 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மூன்று படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியான பரிதாபம்..
boats capsize in Pakistan's Punjab province
பாகிஸ்தான் வெள்ளம் (கோப்புப் படம்)ஏபி
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் நகரங்களிலிருந்து சுமார் 16,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு பஞ்சாபில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்ததால், மக்கள் பலர் வெளியேறி வருகின்றனர்.

இதுகுறித்து அவசர சேவைகள் மீட்பு அதிகாரிகள் கூற்றுப்படி,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியின்போது ​​முல்தான் மற்றும் பஹாவல்நகர் அருகே மூன்று படகுகள் கவிழ்ந்தன. படகில் பயணித்தவர்களில்

குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் மீட்டுள்ளனர்.

முன்னதாக ஆகஸ்ட் 23ல் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் தகவல் அமைச்சர் அஸ்மா பொகாரி தெரிவித்தார். படகு மூழ்கிப் பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

Summary

Congress general secretary Priyanka Gandhi Vadra on Friday extended her wishes to C P Radhakrishnan, who was sworn in earlier in the day as the 15th Vice President of India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com