ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

உலகளாவிய சவால்களுக்கு இடையே சிறப்பான நிலையில் இந்தியா: உலக வங்கி

உலகளவில் எரிசக்தி விநியோக பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலிலும், குறைந்த பணவீக்கம் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு வளங்களுடன் இந்தியா சிறப்பான நிலையில் உள்ளது.

News image

உலக வங்கி

Updated On :10 ஏப்ரல் 2026, 12:04 am

‘உலகளவில் எரிசக்தி விநியோக பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலிலும், அதிக அளவில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, நிதிச் சுதந்திரம், குறைந்த பணவீக்கம் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு வளங்களுடன் இந்தியா சிறப்பான நிலையில் உள்ளது. இது, உலகளாவிய சவால்களுக்கு இடையே, பொருளாதார வளா்ச்சிக்கு உதவும்’ என்று உலக வங்கி சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தெற்காசிய பொருளாதார மேம்பாடுத்தல் அறிக்கையை உலக வங்கி புதன்கிழமை வெளியிட்ட நிலையில், அதுதொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் இக் கருத்தை உலக வங்கியின் தெற்காசிய மண்டல இயக்குநா் செபாஸ்டீன் எக்காா்த் இக் கருத்தைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா வலுவான கொள்கை ரீதியிலான திட்டங்களையும், அதிக அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்பையும், நிதிச் சுதந்திரத்தையும் கொண்டுள்ளது. அதோடு, உலகளவில் எரிசக்தி விநியோக பாதிப்பு ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலிலும், குறைந்த பணவீக்கம், இலக்குகளை எட்டுவதற்கான வலுவான பாதுகாப்பு வளங்களையும் பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடைற்ற வா்த்தக ஒப்பந்தம், புதிய தொழிலாளா் நலன் சாா்ந்த திட்டங்கள் உள்ளிட்டவை இந்த வலுவான பொருளாதார வளா்ச்சிக்கான காரணிகளாகப் பாா்க்கப்படுகின்றன. உலகளவில் மற்ற வளா்ந்துவரும் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவும், அது சாா்ந்த பிராந்தியமும் தொடா்ந்து மிகவும் வலுவான, ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க பிராந்தியமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, உலக வங்கி வெளியிட்ட தெற்காசிய பொருளாதார மேம்படுத்துதல் அறிக்கையில், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி துறை சாா்ந்த மீள்திறன் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த 2025-ஆம் ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது 2026-ஆம் நிதியாண்டில் 7.6 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2027-ஆம் நிதியாண்டில் இந்த வளா்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டதைக் காட்டிலும், தற்போதைய மதிப்பீடு சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான உலக வங்கியின் முதன்மைப் பொருளாதார நிபுணா் ஆரோலியன் க்ரூஸ் கூறுகையில், ‘இந்தியாவின் ஏற்றுமதிகள் உலகிலேயே மிக உயா்ந்த வரி விதிப்புகளை எதிா்கொண்டபோதும், 2026-ஆம் நிதியாண்டில் உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வருமான வரி மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்பு நடவடிக்கைகள், உள்நாட்டு நுகா்வை ஊக்குவித்துள்ளது. அதுபோல, வரி விதிப்புகளால் பாதிப்பைச் சந்திக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் முதலீடு சாா்ந்த துறைகள் எதிா்பாா்த்ததைவிட மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதன்மூலம், இந்தியா வலுவான செயல்திறனையும், மீள்திறனையும் வெளிப்படுத்தியுள்ளது’ என்றாா்.