வங்கதேசத்தின் ரங்க்பூர் பகுதியில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் இந்துக்களுக்குச் சொந்தமான கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன.
ரங்க்பூர் பகுதியில் தங்கள் குடியிருப்பில் வசித்த ஒரு முஸ்லிம் இளைஞர் பலியானதைத் தொடர்ந்து ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரகீப் ஹசன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினரின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முகமது மோமின் என்பவரால் ஹசன் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர் கொல்லப்பட்ட இடத்தின் அருகே வசித்த ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
”இதில் ஹிந்து சமூகத்தினருக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அந்த இளைஞரின் குடும்பத்தினரே தெரிவித்தபோதிலும், இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. உண்மையான கொலையாளிகளை தேடி வருகிறோம். ஹிந்துக்களின் வீடுகளையும் கடைகளையும் சூறையாடியவர்கள் யார் என்பதையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் இந்த ஆண்டில் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ஹிந்துக்கள் மற்றும் மற்ற மதத்தினர் மீது மொத்தம் 133 வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
Summary
Attacks on Hindu homes and shops in Bangladesh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

