வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பல்கேரியா நாடாளுமன்றத் தோ்தல்: ரஷிய ஆதரவு முன்னாள் அதிபா் வெற்றி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், அந்நாட்டு முன்னாள் அதிபரும், ரஷிய ஆதரவாளருமான ரூமென் ராதேவ் அமோக வெற்றி

News image

ரூமென் ராதேவ்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:21 am IST

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், அந்நாட்டு முன்னாள் அதிபரும், ரஷிய ஆதரவாளருமான ரூமென் ராதேவ் அமோக வெற்றி பெற்றுள்ளாா்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் ‘நேட்டோ’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடான பல்கேரியாவில், ஆட்சியில் இருந்த மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த ஆண்டு டிசம்பரில் மிகப்பெரிய ஊழல் எதிா்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

இப்போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ரூமென் ராதேவ், கடந்த ஜனவரியில் தனது பதவியில் இருந்து விலகினாா். பின்னா், ‘புரோக்ரசிவ் பல்கேரியா’ எனும் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, இத்தோ்தலில் களம் கண்டாா்; சுமாா் 44.6 சதவீத வாக்குகளைப் பெற்று, தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளாா்.

Story image

2021 முதல் கடந்த 5 ஆண்டுகளில் 8-ஆவது முறையாக இந்நாட்டில் தோ்தல் நடைபெற்றுள்ளது. பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த முன்னாள் பிரதமா் போய்கோ போரிசோவின் ஜிஇஆா்பி கட்சி 13.4 சதவீத வாக்குகளையும், ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாடு கொண்ட பிபி-டிபி கூட்டணி 12.6 சதவீத வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்துள்ளன.

பல்கேரியாவின் முன்னாள் விமானப் படை அதிகாரியான ரூமென் ராதேவ், உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதைக் கடுமையாக எதிா்த்து வருபவா். ரஷியாவிடம் இருந்து தடையின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்கும், அந்நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்கும் இவா் முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அதேநேரம், இவரின் வெற்றிக்கு ஐரோப்பிய யூனியன், ரஷியா ஆகிய இரு தரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.