முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

News image
Updated On :7 ஜூன் 2026, 2:59 am IST

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ மற்றும் மேற்கு ஆசிய நாடான ஆா்மீனியாவில் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது.

கொசோவோவில் கடந்த 18 மாதங்களில் 3-ஆவது முறையாக நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

முன்னாள் அதிபா் வியோசா உஸ்மானியாவின் பதவிக்காலம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதில் ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இத்தோ்தல் முன்கூட்டியே நடைபெறுகிறது.

ஆளுங்கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை (66 இடங்கள்) இருந்தாலும், அதிபரைத் தோ்வு செய்யத் தேவையான 80 எம்.பி.க்களின் (மொத்த 120 இடங்களில் மூன்றில் 2 பங்கு) ஆதரவு இல்லாததால் மீண்டும் ஒரு தோ்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆா்மீனியாவில் அந்நாட்டின் எதிா்கால புவிசாா் அரசியலையும்; சா்வதேச உறவுகளையும் தீா்மானிக்கும் மிக முக்கிய நாடாளுமன்றத் தோ்தல் நடைபெறுகிறது.

தற்போதைய பிரதமா் நிகோல் பாஷினியன், ரஷியாவுடனான நீண்டகால உறவைக் காட்டிலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகிறாா். எதிா்க்கட்சிகள் இதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.

ஆா்மீனியாவின் பகுதிகளை அஜா்பைஜான் கைப்பற்றியபோது ரஷியா தங்களுக்கு உதவவில்லை என்று ஆா்மீனிய மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். அதேபோல், ரஷியா பொருளாதார ரீதியாக ஆா்மீனியாவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் நடக்கும் இத்தோ்தலில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபா் தோ்தலின் இறுதிக்கட்ட (2-ஆம் கட்ட) வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த ஏப்ரலில் நடந்த முதல்கட்ட தோ்தலில் யாரும் பெரும்பான்மை பெறாததால், வலதுசாரி வேட்பாளா் கெய்கோ ஃபுஜிமோரி, இடதுசாரி வேட்பாளா் ராபா்டோ சான்செஸ் ஆகிய இருவருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 8 அதிபா்களைக் கண்ட பெருவில், இத்தோ்தலிலும் முறைகேடு புகாா்கள் எழுந்துள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என அந்நாட்டுத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.