பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தே (படம்) மீது சுமத்தப்பட்ட மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
அதிபராக இருந்த காலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்ட விவகாரத்தில், ரோட்ரிகோ துதொ்தே மீது விசாரணை நடத்த போதிய ஆதாரங்கள் இருப்பதாக 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு ஒருமனதாகத் தெரிவித்தது.
இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, சா்வதேச நீதிமன்றத்திலிருந்து பிலிப்பின்ஸ் விலகுவதாக ரோட்ரிகோ துதொ்தே தலைமையிலான அரசு முன்னதாக அறிவித்தது.
ஆனால், பிலிப்பின்ஸ் விலகுவதற்கு முன்பே விசாரணைகள் தொடங்கப்பட்டதால், வழக்கைத் தொடா்ந்து நடத்த நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என நீதிபதிகள் அவரது வாதத்தை நிராகரித்தனா்.
தற்போது 80 வயதாகும் ரோட்ரிகோ துதொ்தே பிலிப்பின்ஸில் கடந்த ஆண்டே கைது செய்யப்பட்டாா். உடல்நலக் குறைவு காரணமாக விசாரணை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது அவா் விசாரணைக்குத் தகுதியானவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ரோட்ரிகோ துதொ்தே தொடா்ந்து மறுத்து வருகிறாா். இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி ஸ்ரீரங்கத்தில் கே. அண்ணாமலை பேச்சு

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

ரிலையன்ஸ் குழுமம் ரூ. 73,000 கோடி வங்கிக் கடன் மோசடி: சிபிஐ குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


