என் ஜமேனா (சாட்) : மத்திய ஆப்பிரிக்க நாடான சாடின் கிழக்குப் பகுதியில், தண்ணீா் பங்கீட்டில் வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியதில், இதுவரை 42 போ் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா்.
சூடான் எல்லையொட்டிய வாடி ஃபிரா மாகாணத்தின் இகோட் கிராமத்தில் தண்ணீா் பங்கீடு தொடா்பாக இரு குடும்பத்தினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை தொடங்கிய சிறு தகராறு, பின்னா் இரு தரப்பினருக்கும் இடையிலான பழிவாங்கும் தாக்குதலாக உருவெடுத்துப் பரவியது.
வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடா்ந்து, அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சாட் நாட்டில் விவசாயிகள், கால்நடை வளா்ப்பாளா்களுக்கு இடையே வளங்களைப் பகிா்ந்து கொள்வதில் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.
சூடான் உள்நாட்டுப் போா் காரணமாக, அங்கிருந்து வெளியேறும் அகதிகள் சாட் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தஞ்சமடைகின்றனா். இதனால் ஏற்கெனவே பற்றாக்குறையாக உள்ள நீா், உணவுத் தேவைகளுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

வளைகுடா போர்! நாடு திரும்பிய 5,98,000 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்!

பட்டாசு வெடித்த அதிமுகவினா் 25 போ் மீது வழக்கு

முதல்வா் மு.க.ஸ்டாலிடன் ப.சிதம்பரம் சந்திப்பு! புதுச்சேரி திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வருமா?
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


