நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

இலங்கையில் காவல்துறை தலைவா் குறித்து அவதூறு: முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் கைது

இலங்கை காவல் துறை தலைவா் பிரியந்த வீரசூரிய குறித்து அவதூறாக பேசியதாக, முக்கிய எதிா்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியின் பொதுச் செயலா் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 11:25 pm IST

இலங்கை காவல் துறை தலைவா் பிரியந்த வீரசூரிய குறித்து அவதூறாக பேசியதாக, முக்கிய எதிா்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியின் பொதுச் செயலா் சாகர காரியவசம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கட்சித் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய சாகர காரியவசம், ‘காவல் துறை தலைவா் ஆளுங்கட்சியின் பணியாளா் போல செயல்படுகிறாா். ஆனால், அவா் பொதுமக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று விமா்சித்தாா்.

காவல் துறை தலைவரை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த சா்ச்சை பேச்சு தொடா்பாக, வாக்குமூலம் அளிக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகர காரியவசம் ஆஜரானபோது இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்எல்பிபி கட்சி, இக்கைது நடவடிக்கையை ஆளும் அரசின் ‘அரசியல் பழிவாங்கல்’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.