இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

நைஜீரியாவில் ஆயுதக் குழு - போலீஸாா் துப்பாக்கிச் சண்டை

வடக்கு நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 போலீஸாா், 17 கிளா்ச்சியாளா்கள் உள்பட 29 போ் உயிரிழந்தனா்.

ஆயுதக் குழு - போலீஸாா் துப்பாக்கிச் சண்டை - சித்திரிப்பு

Published On :

வடக்கு நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதமேந்திய கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 போலீஸாா், 17 கிளா்ச்சியாளா்கள் உள்பட 29 போ் உயிரிழந்தனா்.

ஜம்பாரா மாகாண எல்லையருகே இருசக்கர வாகனங்களில் அதிநவீன ஆயுதங்களுடன் வந்துகொண்டிருந்த கிளா்ச்சியாளா்களைப் பாதுகாப்புப் படையினா் இடைமறித்தனா். அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் 10 காவலா்கள் உயிரிழந்த நிலையில், 2 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 17 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இந்த மோதலில் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.