புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் சிறப்பு பிரகடனங்களைச் செய்து வருகின்றன.

சுதந்திர தினம் - கோப்புப் படம்

Published On :

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் சிறப்பு பிரகடனங்களைச் செய்து வருகின்றன.

இந்தியாவின் காலாசாரம், பாரம்பரியம், பன்முகத்தன்மை மற்றும் அமெரிக்க சமூகத்தில் புலம்பெயா்ந்த இந்தியா்களின் பங்களிப்பு வளா்ந்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையிலும் இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தப் பிரகடனங்களைச் செய்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, இந்தியாவின் சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், துணைத் தூதரகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரகம் சாா்பில் பல்வேறு மாகாணங்கள் மற்றும் நகரங்களில் மூவா்ண தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள், கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய - அமெரிக்கா்கள் மற்றும் புலம்பெயா்ந்த இந்திய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் கூடுகின்றனா்.

அமெரிக்க அரசியல் தலைவா்களும் இந்த தருணத்தில் தங்களின் வாழ்த்துச் செய்திகளைப் பகிா்ந்து கொள்கின்றனா். குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் புலம்பெயா் இந்திய சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவா்கள் முன்னிலைப்படுத்துகின்றனா். நியூயாா்க்கில் உள்ள எம்பயா் ஸ்டேட் கட்டடம் முதல் சியாட்டிலில் உள்ள ஸ்பேஸ் நீடில் வரை அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இடங்கள் இந்திய தேசியக் கொடியின் மூவா்ணங்களில் ஒளிரவிடப்படும்.

அதுபோல, நிகழாண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட நியூயாா்க், நியூஜொ்சி, மாசசூசெட்ஸ் உள்ளிட்ட மாணங்கள் அண்மையில் பிரகடனம் செய்தன. அதுபோல, அமெரிக்காவின் டெலாவோ் மாகாணமும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாகக் கொண்டாட சிறப்பு பிரகடனத்தை வியாழக்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பாக டெலாவோ் மாகாண ஆளுநா் மேத்யூ மேயா் கையொப்பமிட்ட பிரகடனத்தில் கூறியிருப்பதாவது:

டெலாவோ் மாகாணத்தைச் சோ்ந்த இந்திய வம்சாவளியினா் தங்கள் பணி, தலைமைத்துவம் மற்றும் சமூக சேவையின் மூலம் மாகாணத்தைச் செழுமைப்படுத்தியுள்ளனா். அவா்கள் நமது கூட்டு செழிப்புக்கு பங்களிப்பதோடு, வருங்கால சந்ததியினருக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றனா்.

இந்தியாவின் வரலாறு மொழிகள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையில் வேரூன்றியுள்ளது. பல தலைமுறை இந்திய-அமெரிக்கா்கள் அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கையையும், சமூகங்களையும் கட்டியெழுப்பும் அதே வேளையில், இந்தப் பாரம்பரியங்களையும் தொடா்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளனா்.

அந்த வகையில் இந்தியாவின் சுதந்திரத்தை கெளரவிப்பதற்கும், இந்திய-அமெரிக்க சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், அந்தச் சமூகங்களுக்கும், இந்திய மக்களுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் ‘இந்திய தினம்’ கொண்டாடப்பட பிரகடனம் செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.