புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

4 நிமிட ஜூம் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கர்க்! இன்று அவருக்கும் அதே நிலை

4 நிமிட ஜூம் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கர்க் பணியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி..

MSCI India companies' earnings growth to accelerate to 14 pc in FY27: Report

தனியார் நிறுவனம் - பிரதி படம் - file photo

Published On :

2021ஆம் ஆண்டு மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கர்க், ஒரே ஒரு ஜூம் காலில் 900 பேரை நீக்கியது பேசுபொருளாகியிருந்த நிலையில், அவர் இன்று பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 3ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தன்னுடைய பதவியை மீண்டும் கேட்டு போராடி வருகிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 900 பேரை ஒரே அழைப்பில் பணியிலிருந்து நீக்கியவர், இன்று தன்னுடைய பணி நீக்கத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நிதி ஆலோசகர் என்று கூறிய லேவிஸ் என்பவர், ஆறு மாதங்களுக்கு முன்பு தன்னை அணுகியதாகவும், நிறுவனத்தின் நிதிநிலையை சமாளிக்க வழி முறைகள் குறித்து பேசிய, நிறுவனத்தைப் புகழ்ந்ததாகவும், பிறகு, நிறுவனத்துக்குள் நுழைந்து, குழு உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டார்.

தற்போது, தன்னையே, இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, லேவிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பதாக கார்க் குற்றஞ்சாட்டியிருக்கிறார். முதலில் இருந்தே, அவருக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் எண்ணம் இருந்திருக்கிறது, இது பற்றி தெரியாமல் இருந்துவிட்டேன் என்று விஷால் கர்க் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவினர் தன்னிச்சையாக முடிவெடுத்து தன்னை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

விஷால் கர்க், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியான போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். மேலும், பெட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு தன்னை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் அவர் முறைப்படி கோரியுள்ளார். நிறுவனம் லாபம் ஈட்டும் வரை ஆண்டுக்கு 1 டாலர் ஊதியத்தில் பணியாற்றுவதாகவும் கார்க் முன்வந்துள்ளார். நிறுவனம் லாபம் ஈட்டுவது உறுதி செய்யப்பட்டதும், தானே பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்றும் அவர் கூறுகிறார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவினர் தன்னிச்சையாக முடிவெடுத்து தன்னை நீக்கியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தான் நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் நிலையில், என்னை வெளியேற்றிய நடைமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.