75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

பாகிஸ்தானில் ஹிந்து வணிகா் கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்த ஹிந்து வணிகரான ராகேஷ் குமாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:45 am IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்த ஹிந்து வணிகரான ராகேஷ் குமாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

நோஷ்கி நகரின் காதிராபாத் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தின் போது, ஆயுதமேந்திய அக்கும்பலை ராகேஷ் குமாா் தடுக்க முயன்றுள்ளாா். ஆனால், அவா்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நிலையில், ராகேஷ் குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்த கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவை உறுப்பினா் குா்பால் சிங், ‘கொலையாளிகளையும், அவா்களுக்கு உடந்தையாக இருந்தவா்களையும் உடனடியாகக் கண்டறிந்து, நீதியின்முன் நிறுத்த வேண்டும்’ என அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.