
ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!
ஆப்கானிஸ்தானில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு - AP
ஆப்கானிஸ்தானில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஆப்கன் முழுவதும் 37 லட்சம் குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக யுனிசெஃப் அமைப்பின் ஆப்கன் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்காமல், விரைவான நடவடிக்கை எடுக்காமல் விட்டால் 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்றும் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.
கடுமையான உடல் மெலிவு மற்றும் மருத்துவச் சிக்கல்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் ஆறு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய பச்சிளம் குழந்தைகள் என்று அவர் கூறினார்.
உடல் மோசமாக நலிவடைந்து, உடலில் குறைபாடுகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 40% பேர் 6 மாதங்களுக்கு குறைவான வயதுடைய பச்சிளம் குழந்தைகளே.
இரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 80% பேர் ஆப்கனில் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.
குழந்தைகள் பலியாவதில் அதிக பங்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையால் ஏற்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த நிலைமை மிகவும் மோசமாகி வருகின்றது.
கடந்த ஜூலை 2025-ல் 6,000 குழந்தைகள் இந்தப் பிரச்னையால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது கடந்த மாதத்தில் 8,000 ஆக அதிகரித்துள்ளது.
தெற்கு ஆப்கனில் சில மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டில் 3, 4 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பால் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதாக ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர் மற்றும் பிற பேரிடர்கள் காரணமாக ஆப்கன் சில பத்தாண்டுகளாக கடுமையான பட்டினி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது. அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்து பின்வாங்கிய பிறகு தலிபான் அரசு பதவியேற்றதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி உருவானது.
Summary
One million children in Afghanistan affected by malnutrition!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






