பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ரஷியா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

ரஷியா மற்றும் உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது குறித்து...

News image

ரஷியா - உக்ரைன் போர் (கோப்புப் படம்) - AP

Updated On :26 பிப்ரவரி 2026, 8:56 pm IST

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் ஒப்படைத்துள்ளன.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில், களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் அவ்வப்போது ஒப்படைத்து வருகின்றன.

இந்த நிலையில், போரில் கொல்லப்பட்ட 1,000 உக்ரைன் வீரர்களின் உடல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் ரஷிய அரசு ஒப்படைத்துள்ளதாகவும், அதற்கு நிகராக 35 ரஷிய வீரர்களின் உடல்களை உக்ரைன் ஒப்படைத்துள்ளதாகவும் இன்று (பிப். 26) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையிலான போரில், இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்துடன், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The governments of both countries have handed over the bodies of soldiers killed in the war between Russia and Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.