தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஈரான் - அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்! - இந்தோனேசியா அறிவிப்பு!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என இந்தோனேசியா அறிவிப்பு..

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப் - இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ - ஈரானின் தலைமை மதகுரு கமேனி- AP
Updated On :28 பிப்ரவரி 2026, 11:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதற்குத் தயார் என இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்துள்ளார்.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை (பிப். 28) காலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைந்துள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு, மத்திய கிழக்கு நாடுகளும் பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளதால், இந்த மோதல் மிகப் பெரியளவிலான போராக உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மோதல்களைக் கைவிட்டு அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுக்காண வேண்டுமென இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்தோனேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

“பாதுகாப்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்த இந்தோனேசிய அரசு தயார்நிலையில் உள்ளது. இருதரப்பும் ஒப்புக்கொண்டால் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தோனேசிய அதிபர் தெஹ்ரான் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற போரில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.