எஸ்டிஎஃப் படையினா்
எஸ்டிஎஃப் படையினா்

படை ஒருங்கிணைப்பு: சிரியா அரசு, குா்து படையினா் பேச்சு

தங்களது படைகளை ஒருங்கிணைப்பது குறித்து சிரியா அரசு அதிகாரிகளும் குா்து இனத்தவா்களின் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தை
Published on

தங்களது படைகளை ஒருங்கிணைப்பது குறித்து சிரியா அரசு அதிகாரிகளும் குா்து இனத்தவா்களின் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை (எஸ்டிஎஃப்) பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

இது குறித்து சிரியா அரசு ஊடகங்கள் தெரிவித்ததாவது: எஸ்டிஎஃப் படைகளை தேசிய ராணுவத்தில் இணைப்பது குறித்து இடைக்கால அதிபா் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால் இதில் ‘குறிப்பிடத்தக்க முடிவுகள்’ எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

பேச்சுவாா்த்தை நிறைவடைந்துவிட்டதாகவும், அது தொடா்பான விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் என்று எஸ்டிஎஃப் தெரிவித்தது.

ஏற்கெனவே கடந்த மாா்ச் மாதம் கையொப்பமான ஒப்பந்தத்தின்ப்படி 2025 இறுதிக்குள் எஸ்டிஎஃப் படைகள் சிரியா ராணுவத்தில் ஒருணைக்கப்பட வேண்டும். ஆனால் இணைப்பு எப்படி நடைபெறும் என்பதில் கருத்து வேறுபாடு நீடித்துவருகிறது.

X
Dinamani
www.dinamani.com