உலக நாடுகள் மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரம்: தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம்...
அமெரிக்க உச்சநீதிமன்றம்
அமெரிக்க உச்சநீதிமன்றம்படம் | ஐஏஎன்எஸ்
Updated on
1 min read

உலக நாடுகள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு விவகாரத்தில் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது அமெரிக்க உச்சநீதிமன்றம். ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால், இந்தியாவின் சில பொருள்களுக்கு 25 கூடுதல் வரியை (மொத்தமாக 50 சதவீத வரி) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்தாண்டில் அறிவித்தாா்.

அதேபோல, பிற நாடுகளுக்கும் கூடுதல் வரி விதித்தார். இவ்விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை(ஜன. 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உத்தரவில் தலையிடுவது குறித்து உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் அறிவுறுத்தலையும் வெளியிடாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

The US Supreme Court did not issue an opinion on the IEEPA tariffs challenge on Wednesday, marking the second expected date without a decision. An opinion had been previously expected on January 9. The delay leaves businesses and countries facing continued uncertainty over the future of Trump’s tariff.

அமெரிக்க உச்சநீதிமன்றம்
டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com