கிரீன்லாந்தில் பதாகைகளை ஏந்தி பேரணி செல்லும் மக்கள்
கிரீன்லாந்தில் பதாகைகளை ஏந்தி பேரணி செல்லும் மக்கள்படம் - ஏபி

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்ப்புக்கு எதிராக மாபெரும் பேரணி!

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
Published on

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

கிரீன்லாந்தின் தலைநகர் நூக் நகரில் இருந்து அமெரிக்க துணை தூதரகம் வரையில் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.

மாபெரும் பேரணியில் பங்கேற்ற மக்கள்
மாபெரும் பேரணியில் பங்கேற்ற மக்கள்படம் - ஏபி

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பை நிறுவ டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கு கிரீன்லாந்து முக்கியமானது என்பதால் டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனிம வளம் மிக்க தீவுகளை உள்ளடக்கிய கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தம் கொண்டாட நினைப்பதாக உல நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் நுழைந்து சிறை பிடித்து வந்த ஒரு மாத இடைவேளையில், கிரீன்லாந்தைகைப்பற்றும் நடவடிக்கையில் டிரம்ப் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்தில் பதாகைகளை ஏந்தி பேரணி செல்லும் மக்கள்
அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மோதலால் சீனா, ரஷியாவுக்கு பயன்!
Summary

Greenland is not for sale': Thousands march against Trump’s takeover threats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com