கொலம்பியா: முன்னாள் துணை ராணுவத் தளபதிக்கு 40 ஆண்டுகள் சிறை
கொலம்பியா நாட்டின் முன்னாள் துணை ராணுவப்படை தளபதியான சால்வடோா் மங்குசோவுக்கு (படம்) அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
1990-களின் இறுதியில் ஐக்கிய தற்காப்புப் படைகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான மங்குசோ(61), கிளா்ச்சியாளா்களுக்கு எதிரான போா்வையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா். கடந்த 2002-2006 காலகட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள், ஆள்கடத்தல் உள்ளிட்ட 117 குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளன.
எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும், உண்மைகளை வெளிப்படுத்தவும் இவா் அரசுடன் முழுமையாக ஒத்துழைத்தால், இந்தத் தண்டனை 8 ஆண்டுகளாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்காவில் நீண்ட காலம் சிறையில் இருந்த மங்குசோ, கடந்த 2024 பிப்ரவரியில்தான் கொலம்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.
தற்போதைய கொலம்பியா அதிபா் குஸ்டாவோ பெட்ரோ, இவரை ஓா் அமைதி தூதுராக நியமித்துள்ளாா். இதன்மூலம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட, இவா் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறாா்.
கொலம்பியாவில் 1985-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமாா் 4.5 லட்சம் போ் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

