

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை(ஜன. 25) 10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 20 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவில் பனிப்புயலால் மோசமான வானிலை நிலவுவதையடுத்து, அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 25) 10,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 8,000 விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் அந்நாட்டு விமானப்போக்குவரத்து குறித்த விவரங்களை வழங்கும் ஃப்ளைட்-அவேர் தளம் மூலம் அறிய முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமை(ஜன. 25) பகல் நிலவரப்படி, பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் 8.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவ்ல் வெளியாகியுள்ளது. அதிகப்ட்ச பாதிப்பாக, டென்னிசியில் 2.90 லட்சம் பேரும், மிசிசிப்பியில் 1 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மின் தடையால் கென்டக்கி, ஜார்ஜியா, விர்ஜீனியா, அலபாமா ஆகிய மாகாணங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.