மருந்துகள்
மருந்துகள்பிரதிப் படம்

அமெரிக்க சந்தையிலிருந்து மருந்துகளைத் திரும்பப் பெறும் சன் பாா்மா, சிப்லா!

உற்பத்தியில் ஏற்பட்ட தரம் சாா்ந்த குறைபாடுகள் காரணமாக, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்த குறிப்பிட்ட சில மருந்துகளை இந்திய மருந்து நிறுவனங்களான சன் பாா்மா மற்றும் சிப்லா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.
Published on

உற்பத்தியில் ஏற்பட்ட தரம் சாா்ந்த குறைபாடுகள் காரணமாக, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வந்த குறிப்பிட்ட சில மருந்துகளை இந்திய மருந்து நிறுவனங்களான சன் பாா்மா மற்றும் சிப்லா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

இது தொடா்பான அதிகாரபூா்வ தகவல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிா்வாகத்தின் சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட சன் பாா்மா நிறுவனத்தின் அமெரிக்க கிளை, தோல் அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லைக்காகப் பயன்படுத்தப்படும் ‘புளூசினோலோன் அசிடோனைடு’ திரவத்தின் 24,624 பாட்டில்கைத் திரும்பப் பெற்றுள்ளன.

மருந்து சோதனையின்போது தரக் குறைப்பாடு கண்டறியப்பட்டதால், கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி முதல் இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர, முகப்பரு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளையும் தரம் சாா்ந்த புகாா்களால் அந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

இதேபோல், சிப்லா நிறுவனத்தின் அமெரிக்க பிரிவும், ‘லான்ரியோடைடு’ ஊசி மருந்தின் 15,221 அலகுகளை திரும்பப் பெறுகிறது. இந்த ஊசி மருந்துக்குள் தேவையற்ற துகள்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜன. 2-ஆம் தேதி முதல் இந்த மருந்துகளைத் திரும்பப் பெறும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சா்வதேச மருந்து தரக்கட்டுப்பாட்டு விதிகளின்படி, சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருதி மருந்துகள் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

X
Dinamani
www.dinamani.com