உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர் புதின், ஸெலென்ஸ்கி: டிரம்ப்

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அதிபர்கள் விரும்புகின்றனர் என்று டிரம்ப் தெரிவித்தது பற்றி...

News image

ஸெலென்ஸ்கி | டிரம்ப் | புதின் - சித்திரிப்பு

Updated On :6 ஜூலை 2026, 9:48 pm IST

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அதிபர்கள் விரும்புகின்றனர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர். அவர்களிடம் இதுகுறித்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.

நான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த ரஷியா - உக்ரைன் போர் எளிதாக முடிந்திருக்கும். ஏனென்றால், எனக்கு இரு தரப்புத் தலைவர்களையும் தெரியும்.

நான் இந்தியாவையும், பாகிஸ்தானையும் கையாண்டிருக்கிறேன். அணு ஆயுதம் போன்ற மிகவும் மோசமானதாக இருந்திருக்கக்கூடிய மற்ற போர்களையும் கையாண்டிருக்கிறேன்.

ஆகவே, இந்த ரஷியா - உக்ரைன் போரையும் நான் விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Summary

US President Donald Trump has stated that the presidents of Russia and Ukraine wish to bring the war between their countries to an end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.