குவைத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மின்சார நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் 90% குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமே கிடைக்கின்றது. அதில், பாதிப்பு ஏற்பட்டால் நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இந்தத் தாக்குதலால் அந்த நிலையங்கள் தீப்பற்றி எரிந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, குவைத்தின் நீர், மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “குவைத் அரசுக்கு எதிரான ஈரானின் நடத்திய கொடூரமான தாக்குதலில் மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டு, ஆலை மோசமாக சேதமடைந்து, பல மின் உற்பத்தி அலகுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீயணைப்புத் துறையினர் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தொழில்நுட்பக் குழுக்கள் மின்சாரக் கட்டமைப்பின் சேதங்களைக் கண்காணித்து, அவற்றைச் சரிசெய்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அசாதாரண காலகட்டத்தில் பொதுமக்கள் மின்சாரத்தை சேமிக்க வலியுறுத்துகிறோம். மேலும், நாட்டின் நிலவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு தகவல்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
Summary
Iran launches a severe attack on Kuwait's water desalination and power plant
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானில் 140 இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பதிலுக்கு வளைகுடா நாடுகள் மீது ஈரான் குண்டுமழை!!

ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பலை தாக்கிய ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
மீண்டும் போர்! ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்!
அமெரிக்கா தாக்குதல்! ஈரான் உடன் ரஷியா, சீனாவை இணைக்கும் ரயில் பாலம் தகர்ப்பு!
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




