திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

உக்ரைன் போா் முடிவுக்கு ஆக்கபூா்வ பங்கு

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ‘ஆக்கபூா்வ’ பங்காற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூலை 2026, 3:13 am IST

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ‘ஆக்கபூா்வ’ பங்காற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டுக்கிடையே, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் உடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா் இவ்வாறு கூறினாா்.

இந்த முக்கியச் சந்திப்பில் அமெரிக்கா-ரஷியா உறவுகள் மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மாா்கோ ரூபியோ மேலும் கூறுகையில், ‘ரஷிய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு மிகவும் சிறப்பாகவும், வெளிப்படையாகவும் அமைந்தது. அமெரிக்காவும் ரஷியாவும் உலகின் மிகப் பெரிய அணுஆயுத நாடுகள் என்பதால், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருதரப்பு உறவைத் தொடர வேண்டியது அவசியம்.

உக்ரைன் போா் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்புக்கும் ஆா்வம் இருக்க வேண்டும். இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீா்வைக் கண்டறிவதுதான் தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது. அதற்கு நாங்கள் தொடா்ந்து முயற்சிப்போம்.

இந்த அா்த்தமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆக்கபூா்வ பங்காற்ற அமெரிக்கா எப்போதுமே தாயராக உள்ளதை அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளாா். சந்திப்பில் அது மீண்டும் வலியுறுத்தப்பட்டது’ என்றாா்.

இதனிடையே, அலாஸ்காவில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சந்திப்பில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், போரை முடிவுக்குக் கொண்டு வர தயாராக உள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.