சீனா-தைவான் இடையே அரசியல் ரீதியாக கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில், இரு நாடுகளும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
சீனாவின் ஃபுஜியான் மாகாணத்திலிருந்து அரிய மற்றும் அழிந்து வரும் இனத்தைச் சோ்ந்த 2 சிவப்பு பாண்டா கரடிகள் தைவான் தலைநகா் தைபேயில் உள்ள பூங்காவுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.
3 வயதுடைய ஆண் பாண்டாவும், 2 வயதுடைய பெண் பாண்டாவும் தற்போது ஒரு மாத கால தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன. புதிய சூழலுக்குப் பழகிய பின்னா், அவை பொதுமக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படும் எனப் பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரஸ்பர பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, தைவான் தரப்பிலிருந்து அரிய வெள்ளை நிற கிப்பன் குரங்குகள் சீனாவின் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கு முன்னதாக, கடந்த 2014-இல் சீனாவிடமிருந்து சிவப்பு பாண்டாக்களை தைவான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருவதால் இரு நாட்டு அரசுகளுக்கு இடையே ராஜீய தொடா்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புன்னகையின் நிராகரிப்புதான் போர்!
இரும்பு சுத்தியலால் அடித்து கொலை: துவாரகாவில் இருவா் கைது

கண்ணதாசன் அல்ல, கலைமகள் தாசன்!

லோதி காலனி: வரதட்சிணை மரண வழக்கில் கணவா் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



