சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பகல் பொழுதே நள்ளிரவு போல தோன்றும்! முழு சூரிய கிரகணம் எப்போது?

பகல் பொழுதே நள்ளிரவு போல தோன்றும் முழு சூரிய கிரகணம் எப்போது தோன்றுகிறது என்பது பற்றி..

News image

சூரிய கிரகணம் - file photo

Updated On :9 ஜூன் 2026, 5:13 pm IST

வானியல் அதிசயங்களில் முழு சூரிய கிரகணம் சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவிருக்கிறது.

வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து, சூரியனின் ஒளி பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மீது விழாமல் தடுக்கும் நிகழ்வாகும்.

க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின், வடகிழக்கு போர்த்துக்கல் நாடுகள் இந்த முழு சூரிய கிரகணத்தின்போது இருண்டு விடும் என்று கூறப்படுகிறது. இங்கெல்லாம் பகல் நேரத்தில் சூரியன் முற்றிலும் மறைந்துவிடுமாம்.

அதேவேளையில், ஐரோப்பா, ஆப்ரிக்கா, வடக்கு அமெரிக்க நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் பகுதிநேர சூரிய கிரகணம் ஏற்படும்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதுபோல, ஸ்பெயினில் முழு சூரிய கிரகணமானது 1905ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

இந்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. எனினும் நாசா போன்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக மக்கள் நேரலையில் முழு சூரிய கிரகணத்தைக் காணலாம்.

அடுத்த முழு சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழவிருக்கிறது. அதுவும் ஸ்பெயின், வடக்கு ஆப்ரிக்கா, சௌதி அரேபியா, ஏமன் போன்ற நாடுகளில் மட்டுமே தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் 2033ஆம் ஆண்டு மார்ச் 30 வரை முழு சூரிய கிரகணத்தைக் காண வழியேயில்லை என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அன்றைய நாளிலும் சில பகுதிகளில்தான் பார்க்க முடியும் என்றும், ஒட்டுமத்த அமெரிக்காவிலும் 2044ஆம் ஆண்டுதான் முழு சூரிய கிரகணம் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.

நேரடியாகப் பார்க்கலாமா?

முழு சூரிய கிரகணத்தை வெறுங்கண்களால் பார்ப்பது நல்லதல்ல. அதுவும் சூரியனை முற்றிலும் சந்திரன் மறைத்திருக்கும்போது, சூரியன் லேசான வெளிப்படும் நேரம் அதிக வெளிச்சத்துடன் வரும் என்பதால், கண்பார்வை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.

Summary

About when a total solar eclipse occurs, which appears like midnight during the day..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.