எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

யுபிஎஸ்சி: சூரியக் குடும்பமும் எட்டுக் கோள்களும்!

சூரியக் குடும்பம் மற்றும் அதன் எட்டுக் கோள்கள் குறித்து...

News image
Updated On :8 ஜூன் 2026, 6:55 pm IST

சூரியக் குடும்பம் குறித்தும், சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டுக் கோள்கள் குறித்தும் பின்வருமாறு காணலாம்.

சூரியக் குடும்பம்

  • சூரியக் குடும்பம் என்பது நடுவில் ஒரு நட்சத்திரமும் அதைச்சுற்றி வலம் வரும் எட்டு கோள்கள், துணைக்கோள்கள், சிறியக் கோள்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைக் கொண்ட அமைப்பு.

  • புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய எட்டு கோள்களும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

  • நம் சூரியக் குடும்பம் பால்வழி அண்டத்தின் வெளிப்புற சுழலில் அமைந்துள்ளது.

  • நமது சூரியக் குடும்பம் பால்வழி அண்டத்தைச் சுற்றி வர 230 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

  • எட்டு கோள்களில் புதன் மற்றும் வெள்ளி தவிர மற்ற அனைத்திற்கும் துணைக் கோள்கள் உள்ளன. வியாழனும், சனியும் மிக அதிக அளவு துணைக்கோள்களைக் கொண்டுள்ளன.

சூரியன்

  • சூரியக் குடும்பத்தின் மையத்தில் அமைந்துள்ளது, வெப்பமான எரிவாயுக்களால் ஆன பந்து போன்ற அமைப்புடைய மஞ்சள் நிற குறு நட்சத்திரம்.

  • சூரியனில் 70.6% ஹைட்ரஜன், 27.4% ஹீலியம் மற்றும் 2% இதர வாயுக்களால் ஆனது.

  • சூரியனின் முதன்மையான மூன்று அடுக்குகள் உட்கரு (Core), கதிர்வீச்சு மண்டலம் (Radioactive zone) மற்றும் வெப்ப உமிழ்வு சுழற்சி மண்டலம் (Covective zone) ஆகும்.

  • சூரியனின் உட்பகுதிக்கும் சூரிய வளிமண்டலத்திற்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியை ஒளிமண்டலம் (Photosphere) என அழைக்கிறோம்.

  • சூரிய வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியை வண்ணக்கோளம் (Chromosphere) என அழைக்கிறோம்.

  • சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் முதல் 6000 டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியனின் மையப்பகுதியின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும்.

  • சூரியன் புவியைவிட மிகப் பெரிய பருமனை கொண்டது. ஒரு சூரியனின் கொள்ளளவை நிரப்ப 1.3 மில்லியன் புவிக்கோள்கள் தேவை.

  • சூரியன் தனது அச்சின் 7.25 டிகிரி சாய்வாக கோள்களின் நீள்வட்டப் பாதை தளத்தில் சுழல்கிறது.

  • சூரிய நடுக்கோட்டுப் பகுதியில் சூரியனானது ஒருமுறை சுற்றிவர 25 நாள்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், சூரியன் துருவப் பகுதியில் சுற்றிவர 36 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.

  • சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியன் மட்டுமே 99.8 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

கோள்கள்

கிரேக்க மொழியில் கோள்கள் என்றால் சுற்றுபவர் (wanderer) என்று பொருள்.

கோள்களுக்கு சுயமாக ஒளியும் வெப்பமும் கிடையாது.

கோள்களின் பண்புகள்,

1. சூரியனைச் சுற்றி வர வேண்டும்

2. வேறு எந்த கோளிற்கும் துணைக்கோளாக இருக்கக் கூடாது.

3. தன்னுடைய நிறை மற்றும் ஈர்ப்பு சக்தியின் மூலம் கோள வடிவைப் பெற்றிருக்க வேண்டும்.

4. வேறு எந்த வான்பொருளும் இதன் நீள்வட்டப் பாதையில் குறுக்கிடக் கூடாது.

உள்கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் - புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்

வெளிக்கோள்கள் அல்லது வாயுக்கோள்கள் - வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

புதன் (Mercury)

  • சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்

  • சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே மிகச் சிறிய கோள்.

  • இதற்கு துணைக்கோள் எதுவும் கிடையாது.

  • சூரியக் குடும்பத்தில் இரண்டாவது வெப்பமான கோள்.

வெள்ளி (Venus)

  • சூரியனுக்கு அருகில் உள்ள இரண்டாவது கோள்.

  • இது நிறையில் புவியைப்போல் இருப்பதால் புவியின் சகோதரி என அழைக்கப்படுகிறது.

  • சூரியக் குடும்பத்தின் மிக வெப்பமானக் கோள்.

  • இது காலையில் விடிவெள்ளி என்றும் மாலையில் அஸ்தமனவெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

  • கிழக்கிலிருந்து மேற்காக தனது அச்சில் சுழல்கிறது.

  • இதற்கு இயற்கையான துணைக்கோள் கிடையாது.

  • சூரியக் குடும்பத்தில் வெள்ளியும் யுரேனஸும் பின்புறமாக சுழல்கிறது.

  • வெள்ளி மிகவும் அடர்த்தியான வெளிமண்டலம் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடால் ஆனது.

புவி (Earth)

  • புவி சூரியனுக்கு மிக அருகில் உள்ள மூன்றாவது கோள்.

  • இது சூரியக் குடும்பத்தின் ஐந்தாவது பெரியக் கோளாகும்.

  • புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றி வர 23 மணி நேரம் 56 நிமிடம் 4 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது.

  • புவியின் வெப்பநிலை -88 டிகிரி செல்சியஸிலிருந்து 58 டிகிரி செல்சியஸ் வரை

  • இது சூரியக் குடும்பத்தின் மிக அடர்த்தியான கோள்.

  • உயிரினங்கள் காணப்படும் ஒரே கோள் புவியாகும்.

  • புவிக்கு சந்திரன் என்ற ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உள்ளது.

  • சூரிய ஒளி புவியை வந்தடைய 8.20 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

செவ்வாய் (Mars)

  • சூரியனுக்கு அருகில் உள்ள நான்காவது கோள்

  • வடிவத்தில் இரண்டாவது சிறிய கோள்

  • இதன் மேற்பரப்பில் இரும்பு ஆக்ஸைடு காணப்படுவதால் செந்நிறமாகக் காணப்படுகிறது.

  • இதனை சிவப்புக் கோள் எனவும் அழைக்கிறோம்.

  • இதற்கு போபோஸ் மற்றும் டேய்மோஸ் என்ற இரண்டு துணைக்கோள்கள் உள்ளன.

வியாழன் (Jupiter)

  • இது சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள்.

  • பெரும்பாலும் வாயுக்களால் ஆனதால் இதனை மிகப் பெரிய வாயுக்கோள் என்று அழைக்கப்படுகிறது.

  • சூரியக் குடும்பத்தில் மிகக் குறுகிய நாள் கொண்ட கோள் வியாழன் மட்டுமே.

  • கனிமேடெ (Ganymede) எனும் வியாழனின் துணைக்கோள்தான் சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய துணைக்கோளாகும்.

சனி (Saturn)

  • சூரியக் குடும்பத்தில் அளவில் இரண்டாவது பெரியக் கோள்

  • இது வளையக்கோள் என்றும் அழைக்கப்படுகிறது.

  • சூரியக் குடும்பத்தில் நீரைவிட அர்த்திக் குறைவான ஒரே கோள் சனியாகும்.

யுரேனஸ் (Uranus)

  • இந்த கோளை வெறும் கண்களால் காண இயலாது.

  • இது வெள்ளியைப் போன்று கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.

  • சூரியனிடமிருந்து தொலைவில் அமைந்திருப்பதால் மிகக் குளிர்ந்து காணப்படுகிறது.

  • கிரேக்க கடவுளின் பெயரான யுரேனஸ் என்பதை இக்கோளுக்குச் சூட்டியுள்ளனர்.

  • இக்கோள் முக்கியமாக மீத்தேன் வாயுவைக் கொண்டுள்ளதால் நீல பச்சையாக தோற்றமளிக்கிறது.

நெப்டியூன் (Neptune)

  • இது சூரியனிடமிருந்து மிகக் தொலைவில் அமைந்திருப்பதால் சூரியக் குடும்பத்தின் மிகக் குளிரான கோளாகும்.

  • கணிதக் கணிப்பின்படி கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள் நெப்டியூன் ஆகும்.

  • நமது சூரியக் குடும்பத்தின் காற்று அதிகமாக வீசும் கோளாகும்.

Summary

About the solar system and its eight planets...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.