ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

14.7.1976: ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க செயற்கைக் கோள்

ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க செயற்கைக் கோள் உதவி பற்றி...

News image

14.7.1976 - Dinamani

Updated On :13 ஜூலை 2026, 1:35 pm IST

ஒலிம்பியா (கிரீஸ்), ஜூலை. 13 - ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது தான் ஒலிம்பிக் விளையாட்டு துவங்குவதற்கான முதல் அடையாளமாகும்.

கிரீஸ் நாட்டிலே "ஒலிம்பியா" என்னும் இடத்தில் தான் 2752 ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலாக ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தன. அந்த இடத்திலே கிரேக்கக் கடவுளின் ஆலயம் உள்ளது. ஆலயத்தின் முன்பு உள்ள பலிபீடத்திற்கு அருகே புனித நெருப்பு எப்போதும் கனன்று கொண்டு இருக்கும்.

ஒவ்வொரு ஒலிம்பிக் பந்தயம் நடக்கும் போதும், முதன் முதலாக இந்த ஆலயத்தின் முன்புள்ள நெருப்பிலிருந்து ஒலிம்பிக் ஜோதி கொளுத்தப்படும். பின்பு ஒலிம்பிக் விளையாட்டு எந்த இடத்தில் நடக்கிறதோ, அங்கு இந்த ஒலிம்பிக் ஜோதியை பல்வேறு ஒட்ட வீரர்கள் தொடர் மாசுக் கொண்டு செல்வார்கள். இது தான் சம்பிரதாயம்.

காலப் போக்கிலே சம்பிரதாயங்களிலும் சிற்சில மாறுதல்கள் ஏற்படத் தான் செய்கின்றன.

இந்த ஆண்டு ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படும் விஷயத்தில் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ...

... செயற்கைக்கோள் மூலம்

வழக்கமாக ஒலிம்பிக் ஜோதியை ஒலிம்பிக் பந்தயம் நடக்கும் இடம் வரையிலேயே தொடர் ஓட்டமாக கொண்டு வருவது தான் சம்பிராதயம். இந்த ஆனால், ஆண்டு அந்த சம்பிரதாயத்தில் சிறு மாற்றம்.

ஏதென்ஸ் நகருக்கு ஜோதி வந்து சேர்ந்தவுடன், அது ஒரு மின் அணு அறைக்குள் கொண்டு செல்லப்படும். அங்கே இந்த ஜோதியின் ஒளி அலைகள்,"டெலிபோன் சிக்னல்" அலைகளாக மாற்றப்படும்.

இந்த டெலிபோன் சிக்னல் அலைகளை ஒரு செயற்கைக் கோள் கனடாவுக்கு அஞ்சல் செய்யும். கனடாவில் இந்த டெலிபோன் அலைகள் ஒரு "லேசர்" கதிரை இயக்கி விடும். அங்கே தயாராக வைக்கப்பட்டிருக்கும் மற்றோர் ஜோதியில் இந்த கதிர் ஒளியேற்றும்.

ஏதென்ஸ் மின் அணு அறையிலிருந்து, கனடா லேசர் கதிர் வரையிலான இந்த இயக்கங்கள் யாவும் அரை நொடிக்குள் நடந்து முடிந்துவிடும்.

பார்லிமெண்டில் மசோதாக்களுக்கு இந்தி மொழி பெயர்ப்பு

திருப்பதி, ஜூலை. 12- பார்லிமெண்டில் இனி தாக்கலாகும் எல்லா மசோதாக்களும், அங்கீகரிக்கப்பட்ட இந்தி மொழி பெயர்ப்புடன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று இந்தி ஆலோசனைக் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.

ஆட்சி மொழி சட்டத்திலான சம்பந்தப்பட்ட ஷரத்தின் அமல் மூலம் விரைவில் இந்தி மொழி பெயர்ப்புடன் கூடியதாக இல்லாத எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட முடியாது என்று இக்கமிட்டி கூறியுள்ளது. இங்கு இக்கமிட்டிக் கூட்டம் மத்திய அரசாங்க சட்டத்துறை துணை மந்திரி சையத் முகமது தலைமையில் நடைபெற்றது.

அரசியல் சட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு இந்தியிலும், இதர பிராந்திய மொழிகளிலும் கிடைக்கச்செய்ய சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்று கமிட்டி கூறியுள்ளது.

வழக்குகள் நடைபெறுவதிலான காலதாமதத்தையும், வழக்குகளுக்கு ஆகும் செலவைக் குறைக்கவும். "சிவில் புரொசீஜர் கோட்" திருத்தப்படும் என்று நிருபர்களிடம் துணை மந்திரி சையத் முகமது கூறினார்.

Summary

14.7.1976: Satellite used to light the Olympic flame

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.