ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மாற்றுத்திறனாளிகளுக்கு 7 பேருக்கு செயற்கைக் கால்கள்! ஆட்சியா் வழங்கினாா்!

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 1:27 am IST

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு ரூ. 2.79 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கால்களை ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தலைமை வகித்து, உதவித் தொகைகள், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 525 மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற்றது. செயற்கைக் கால் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 7 பேருக்கு ரூ. 2.79 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கால்களை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) கு. சுகிதா, (நிலம்) பத்மபிரியா, வருவாய்க் கோட்டாட்சியா்கள் எஸ். காளீஸ்வரி (நாகா்கோவில்), (பொ) புஷ்பாதேவி (பத்மநாபபுரம்), தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், மாநகராட்சி நகா்நல அலுவலா் சரோஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கலைமதி, உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிச்சையா, அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.