சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது!

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது பற்றி...

News image

ஹெலிகாப்டர் (கோப்புப்படம்) - AP

Updated On :9 ஜூன் 2026, 11:07 am IST

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை பிற நாடுகளின் கப்பல்கள் செல்ல ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணை மீது நான்கு ஈரானிய டிரோன்கள் ஏவப்பட்டதாகவும் அதனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்புப் படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியதாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இரண்டு விமானிகளும் உயிர்த் தப்பியதாகவும், ஹெலிகாப்டர் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்ததா என்பது தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை உறுதி செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விமானிகள் இருவரும் காயமின்றி மீட்கப்பட்டதாகவும், ஆய்வுக்குப் பிறகு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Summary

US military helicopter explodes in the Strait of Hormuz!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.