‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

ஹோர்முஸ் பகுதியில் சிக்கியுள்ள 6,000 மாலுமிகளை வெளியேற்றுங்கள்! - ஐநா வலியுறுத்தல்!

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள சுமார் 6,000 மாலுமிகளை வெளியேற்ற வேண்டுமென ஐ.நா. அமைப்பு வலியுறுத்தல்...

News image

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம் | ANI

Updated On :24 ஜூலை 2026, 5:16 pm IST

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் இருந்து சுமார் 6,000 மாலுமிகளை வெளியேற்ற உதவுங்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்பும் மீண்டும் போர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்தப் போரில், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முற்றிலுமாக முடக்கியுள்ளன. மேலும், இந்த நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவ்வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் மீதான தாக்குதலில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களில் சிக்கியுள்ள 6,000 மாலுமிகள் வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்புவதற்குப் போரில் ஈடுபட்டுள்ள நாடுகள் உதவி செய்ய வேண்டுமென, ஐ.நா. அமைப்பின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஹோர்முஸ் பகுதியில் சிக்கித் தவிக்கும் மாலுமிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதற்கும் மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

UN has urged to evacuate 6,000 sailors from ships stationed in the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.