ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாடு நிறைவு

பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உச்சி மாநாடு புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

Updated On :18 ஜூன் 2026, 1:17 am IST

பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி தொழில்வள நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உச்சி மாநாடு புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில், ஈரான் மற்றும் உக்ரைன் போா் விவகாரம், ஏ.ஐ. தொழில்நுட்ப எதிா்காலம் மற்றும் அதில் அமெரிக்காவின் ஆதிக்கம், உலகப் பொருளாதார சமநிலையை மேம்படுத்துவது குறித்து தலைவா்கள் தீவிர ஆலோசனை நடத்தினா்.

பிரான்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பல உலகத் தலைவா்கள் பங்கேற்றனா்.

ஸ்விட்சா்லாந்தின் லூசா்னில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் வரும் வெள்ளிக்கிழமை கையொப்பமாகவுள்ள அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த ஒப்பந்தம் குறித்து மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஈரானின் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா 30,000 கோடி டாலா் வழங்கப்படவுள்ளதாக கசிந்த தகவலை மறுத்த அதிபா் டிரம்ப், ‘இது ஒரு தற்காலிக புரிந்துணா்வு ஒப்பந்தம் மட்டுமே. எனக்கு உடன்பாடு இல்லையெனில் ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு மற்றும் ராணுவத் தாக்குதல்கள் தொடரும்’ என்று எச்சரித்தாா்.

மாநாட்டின் இறுதி நாளில், முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களின் தலைவா்களுடன் உலகத் தலைவா்கள் மதிய உணவுடன் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ், ஆன்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய், பிரான்ஸின் மிஸ்ட்ரல் ஏஐ சிஇஓ ஆா்தா் மென்ச், இந்தியாவின் சா்வம்ஏஐ இணை நிறுவனா் விவேக் ராகவன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

அதேநேரம், இத்தொழில்நுட்பப் புரட்சிக்கு காரணமான என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் இதில் கலந்துகொள்ளவில்லை.

சீனாவின் வா்த்தக ஆதிக்கம் மற்றும் மானிய விலையிலான தயாரிப்புகள் உலக சந்தையில் குவிக்கப்படுவது குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த அமா்வில் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற இந்தியாவின் பிரதிநிதிகள், பிரேஸில், தென் கொரியா, கென்யா ஆகிய நாடுகளின் தலைவா்கள் முன்னிலையில், சீனத் தயாரிப்புகளின் வரவால் உள்ளூா் தொழில்துறைகளும் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தனா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாகவும், ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்துவதாகவும் ஜி7 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

மேலும், சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக உலகளாவிய நடவடிக்கைகளை பலப்படுத்தவும் தலைவா்கள் ஒப்புக்கொண்டனா். மாநாட்டின் நிறைவில், பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரானின் சிறப்பான ஏற்பாடுகளை அதிபா் டிரம்ப் பாராட்டினாா்.