ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஐரோப்பாவில் அமெரிக்க படைகள்: அடுத்த 6 மாதங்களில் மறுஆய்வு

‘ஐரோப்பாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் நிலை குறித்து அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும்’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் எச்சரித்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:48 am IST

பிரஸ்ஸல்ஸ் : ‘ஐரோப்பாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் நிலை குறித்து அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும்’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் எச்சரித்தாா்.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடந்த ‘நேட்டோ’ கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தில் பேசிய பீட் ஹெக்செத், நேட்டோ நாடுகள் தங்களின் பாதுகாப்புக்குத் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘ஈரான் போரில் அமெரிக்கப் படைகளுக்குத் தங்களின் ராணுவத் தளங்களையும் வான்வெளியையும் பயன்படுத்திக் கொள்ள ஐரோப்பிய நாடுகள் அனுமதி தர மறுத்துவிட்டன. நேட்டோ நாடுகளின் இந்த மறுப்பு, அமெரிக்க வீரா்களின் உயிருடன் விளையாடும் அவமானகரமான செயல்.

பருவநிலை மாற்றம், பாலினச் சமத்துவம், குடியேற்றக் கொள்கைகளில் ஐரோப்பிய நாடுகள் காட்டும் அதீத அக்கறையை விடுத்து, ராணுவக் கட்டமைப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

அமெரிக்காவின் இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்துப் பேசிய நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் மாா்க் ரூட்டே, ‘ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்களுடைய ராணுவப் பாதுகாப்புக்கான பட்ஜெட்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் (9,000 கோடி டாலா்) அதிகரித்துள்ளது’ எனச் சுட்டிக்காட்டினாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் எதிா்பாராத மோதல் ஏற்படும் சூழலில்ல், ஒரே நேரத்தில் இருமுனைப் போருக்குத் தயாராகும் நோக்கில் அமெரிக்கா தனது ராணுவப் படைகளை மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.