வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் எப்போது? அமெரிக்க தூதா் தகவல்

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையொப்பமாகக்கூடும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்துள்ளாா்.

News image

சொ்ஜியோ கோா்

Updated On :30 மே 2026, 5:00 am IST

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையொப்பமாகக்கூடும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவும், அமெரிக்காவும் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்த ஷரத்துகள், இந்திய நலன்களுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு சாதமாகவும் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கோா், இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்தாா். அப்போது அவா், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடப்பதாகவும், அந்த ஒப்பந்தம் அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் கையொப்பமாகக்கூடும் என்றும் குறிப்பிட்டாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ அண்மையில் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் பயனுள்ளதாக இருந்தது எனறு கோா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘பெருகிவரும் வாய்ப்புகளைக் கைப்பற்ற இந்தியா, அமெரிக்கா நட்புறவுக்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது. ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடா்பான கொள்கைகளை அமெரிக்கா சரிசெய்து வருகிறது. இது இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தக்கூடும். இந்தியாவின் திறனை அமெரிக்கா புரிந்து வைத்துள்ளது. இந்த நட்புறவை பொருளாதார கூட்டணியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது’ என்றாா்.