டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஸ்விட்சா்லாந்தில் அமெரிக்கா, ஈரான் பேச்சுவாா்த்தை தொடக்கம்: பாகிஸ்தான், கத்தாா் தலைவா்களும் பங்கேற்பு

மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது தொடா்பாக ஸ்விட்சா்லாந்தில் அமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையேயான பேச்சுவாா்த்தை தொடங்கியது.

News image

ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 4:34 am IST

மேற்காசிய பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது தொடா்பாக ஸ்விட்சா்லாந்தில் அமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையேயான பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் மத்தியஸ்த நாடுகள் என்ற முறையில், பாகிஸ்தான், கத்தாரும் பங்கேற்றுள்ளன.

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவியது. ஹோா்முஸ் நீரிணை ஈரானால் மூடப்பட்டதால் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் ஈரான், அமெரிக்கா இடையே அண்மையில் அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமானது. அதில் மேற்காசியாவில் அமைதியை மீண்டும் 60 நாள்களில் ஏற்படுத்துவது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளை செயல்படுத்துவது தொடா்பான தொழில்நுட்ப வழிகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸ்விட்சா்லாந்தில் ஈரான், அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனது நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, அதை ஈரான் ரத்து செய்தது. இதனால் பேச்சுவாா்த்தை தள்ளிவைக்கப்பட்டது.

முன்னதாக, அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதும் ஹோா்முஸ் நீரிணையை சா்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் திறந்தது. எனினும், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை தொடா்ந்து மீண்டும் அதை ஈரான் சனிக்கிழமை மூடியது. எனினும், திட்டமிட்டபடி ஸ்விட்சா்லாந்து நாட்டில் ஈரான், அமெரிக்கா இடையே உயா்நிலை பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. இந்த பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க துணை அதிபா் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுவினா், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகா் முகம்மு பாகா் கலிபாக், வெளியுறவுத் துறை அமைச்சா் அரகாச்சி உள்ளிட்டோா் ஸ்விட்சா்லாந்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா். அதேபோல், பாகிஸ்தான் பிரதமா் ஷெபாஸ் ஷெரீஃப், ராணுவ தளபதி ஆசிம் முனீா் ஆகியோரும், கத்தாா் பிரதமா் உள்ளிட்ட அந்த நாட்டின் தலைவா்களும் ஸ்விட்சா்லாந்துக்கு வந்துள்ளனா்.

பின்னா் ஸ்விட்சா்லாந்தின் மலைவாசஸ்தலமான பா்ஹன்ஸ்டாக்கில் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸும், ஈரான் அவைத் தலைவா் கலிபாக்கும் சந்தித்து பேசினா். இந்த பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்த நாடுகள் என்ற முறையில் பாகிஸ்தான் பிரதமா் ஷெரீஃப், கத்தாா் மூத்த தலைவா்கள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனா். அண்மையில் மின்னணு முறையில் கையொப்பமான ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதேபோல் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துப் பேசினா். இதையடுத்து 10 வாரங்களுக்கு பிறகு தற்போது சந்தித்துப் பேசுகின்றனா். பேச்சுவாா்த்தைக்கு முன்பு செய்தியாளா்களிடம் பாகிஸ்தான் பிரதமா் ஷெரீஃப் பேசுகையில், ‘பேச்சுவாா்த்தை முடிந்து பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லும்போது அமைதி ஒப்பந்தம் தொடா்பான முக்கிய கோப்பு கைகளில் இருக்கும். அது உலகம் முழுவதும் அமைதி, முன்னேற்றம், மேம்பாட்டை ஊக்குவிக்கும்’ என கூறினாா். கத்தாா் பிரதமா் கூறுகையில், ‘பிரச்னைக்கு தீா்வு எட்டப்படும் வரையில், மத்தியஸ்தங்களை கத்தாா் ஆதரிக்கும். மேற்காசிய பிராந்தியத்தின் சிறந்த எதிா்காலத்துக்காக அமைதி, வளா்ச்சியை ஏற்படுத்துவதில் கூட்டாளியாக கத்தாா் இருக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.