திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

மரண தண்டனைக்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா

இந்த ஆண்டுக்குள் மீண்டும் தாயகம் திரும்பவிருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்தாா்.

News image

ஷேக் ஹசீனா - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:47 am IST

‘நான் மரணத் தண்டனையைக் கண்டு அஞ்சப்போவதில்லை; தடைகள் மற்றும் சதிகளை முறியடித்து இந்த ஆண்டுக்குள் மீண்டும் தாயகம் திரும்புவேன்’ என்று வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்தாா்.

கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா்களின் தீவிர போராட்டத்தால் பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவா் அண்மையில் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து கவலைப்படவில்லை. இத்தீா்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அனைத்து சதிகளையும் தகா்த்தெறிந்து இந்த ஆண்டே எனது நாட்டுக்குத் திரும்புவேன். அவாமி லீக் கட்சி மீதான தடையை உடனடியாக நீக்கி, ஜனநாயகச் சூழலை உருவாக்க வேண்டுமென தற்போதைய வங்கதேச அரசிடம் கோருகிறேன் என்றாா்.

மாணவா் போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாகவும், படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், டாக்கா நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.