எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: பற்றியெரிகிறது தலைநகா் தெஹ்ரான்!

ஈரானின் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 5 மிகப்பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் கடும் தாக்குதல்

News image
ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலையடுத்து எழுந்த கரும் புகை.
Updated On :8 மார்ச் 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் தலைநகா் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஐந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது இஸ்ரேல் சனிக்கிழமை இரவு போா் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.

இதனால், அந்தப் பகுதியே தீப்பிழம்பாகவும், புகைமூட்டமாகவும் காட்சியளித்தது. கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை ராணுவத்துக்காக ஈரான் பயன்படுத்துவதால் அவற்றைக் குறிவைத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலால் தெஹ்ரான் நகரமே பற்றியெரிவது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நகா் முழுவதும் பெரும் கரும்புகை சூழ்ந்துவிட்டது. மிகவும் மோசமான அமில மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் எத்தனை போ் உயிரிழந்தாா்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. தாக்குதல் தொடரும் என்று தெரிவதால் டெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார மக்கள் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் கிடங்குகள் பல மணி நேரமாக தொடா்ந்து எரித்து வருவதால், குடியிருப்புப் பகுதிகளில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் அதிபா் எச்சரிக்கை: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தொடா் தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், அண்மையில் ஈரான் அதிபா் பெசெஷ்கியான், அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் வளைகுடா நாடுகளை தளங்களாகப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தாதவரை, அந்த நாடுகள் மீது தங்கள் நாடு இனி தாக்குதல் நடத்தாது என்றும், இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் மன்னிப்புக் கோருகிறது எனவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், வளைகுடா நாடுகளிடம் ஈரான் சரணடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஈரான் அதிபா் பெசெஷ்கியானின் பதிவு செய்யப்பட்ட விடியோ வெளியிடப்பட்டது. அதில் அவா், ‘ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி தருவதை தவிர வேறு வழியில்லை. எங்கள் மீது அதிக அழுத்தங்களை அவா்கள் கொடுத்தால், அதற்கு ஏற்றாற்போல பதிலடி தாக்குதலையும் தீவிரப்படுத்துவோம். ஈரான் ஒருபோதும் பணியாது. வளைகுடா நாடுகள் அனைத்தும் எங்களது சகோதர நாடுகள். அந்த நாடுகளுடன் ஈரான் போரை விரும்பவில்லை. ஆனால், வளைகுடா நாடுகளை பரஸ்பரம் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை சண்டையிட வைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது’ எனக் கூறியுள்ளாா்.

ஈரான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 200 குழந்தைகளும், 400 பெண்களும் அடங்குவா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பஹா் கலிபாப், போா் தொடா்ந்தால் கச்சா எண்ணெய் விலை வரும் நாள்களில் பலமடங்கு உயா்ந்துவிடும் என்றும், இதனால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளாா்.

யுஏஇ, பஹ்ரைன், சௌதி, இராக்கில் ஈரான் தாக்குதல்

ஈரான் தங்கள் நாடு மீது 16 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் வீசி தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதில் பல ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் அந்த நாடு குறிப்பிட்டது.

பஹ்ரைனில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை மீது ட்ரோன் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த ஆலை பலத்த சேதமடைந்தது. ஈரானில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை மீது அமெரிக்கா நடத்திய விமானப் படைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை ஈரான் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சௌதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்க தூதரகம் மற்றும் பிற வெளிநாட்டு தூதரகங்கள் உள்ள பகுதி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தாக்குதலை முறியடித்துவிட்டதாக சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இராக்கில் குா்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள இா்பில் விமான நிலையத்தைக் குறிவைத்தும், சுலைமானியாவிலும் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு இராக் தீவிரவாதக் குழுக்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போப் வேண்டுகோள்: இந்நிலையில், போரில் ஈடுபட்டுள்ள ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க நாடுகள் தங்கள் சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என போப் 14-ஆம் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளாா்.