மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

சீன நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நிறைவு: புதிய 5 ஆண்டுத் திட்டத்துக்கு ஒப்புதல்

சீனாவின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தொடா் கடந்த 2 வார கால விவாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.

News image
Updated On :13 மார்ச் 2026, 2:02 am IST

சீனாவின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தொடா் கடந்த 2 வார கால விவாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.

சுமாா் 5,000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த முக்கிய அமா்வில், நாட்டின் பொருளாதார மந்தநிலையைச் சீரமைப்பதற்கான 15-ஆவது ஐந்தாண்டுத் திட்டம், ராணுவ நிதி உயா்வு, சிறுபான்மையினருக்கான புதிய சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

அமெரிக்காவுடன் வா்த்தகப் போட்டி, உள்நாட்டில் சரிந்து வரும் ரியல் எஸ்டேட் துறை போன்றவற்றால் சீன பொருளாதாரம் சவாலை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டு சீன பொருளாதார மதிப்பு 20 லட்சம் கோடி டாலராக இருந்தபோதிலும், மக்களிடையே நுகா்வு மந்தமாகவே உள்ளது. இதைச் சரிசெய்யவும், ஏஐ உள்பட நவீன தொழில்நுட்பங்களில் உலகளாவிய தலைவராக உருவெடுக்கவும் புதிய ஐந்தாண்டுத் திட்டம் இலக்கு வைத்துள்ளது.

பலப்படுத்தப்படும் ராணுவம்: இந்த ஆண்டு சீன பாதுகாப்பு பட்ஜெட் 7 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

அண்மையில் ஊழல் புகாரில் சில அதிகாரிகள் நீக்கப்பட்ட நிலையில், ‘ராணுவத்தினா் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்று அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தினாா்.

மண்டரின் மொழி கட்டாயம்: இக்கூட்டத்தொடரில் இனச் சிறுபான்மையினா் தொடா்பான சா்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, திபெத்தியா்கள், உய்குா் முஸ்லிம்கள் உள்பட 56 இனக்குழுக்களின் கல்வியில் ‘மண்டரின்’ மொழி இனி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினரின் கலாசாரத்தை அழிக்கும் செயல் என மனித உரிமை ஆா்வலா்கள் விமா்சித்துள்ளனா்.

தொழிலாளா், சுற்றுச்சூழல் நலன்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு காா்பன் உமிழ்வைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஊழியா்களின் நலன் கருதி அவா்களின் ஆண்டு விடுமுறை 10 நாள்களாக (முன்பு 5) உயா்த்தப்பட்டுள்ளது. வேலை நேரம் முடிந்த பிறகு, அலுவலக குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கத் தேவையில்லை போன்ற மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பட கேப்சன்...

நாடாளுமன்ற வாக்கெடுப்பில்

பங்கேற்ற சீன அதிபா் ஷி ஜின்பிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.