மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு!

எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2026, 6:55 pm

எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா மீது கடந்த ஜனவரியில் அதிரடி ராணுவ தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்தது. இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு, நியூயாா்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மடூரோ சிறைபிடிப்பைத் தொடா்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றாா். அவா், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீதான அரசின் முழுக் கட்டுப்பாட்டைத் தளா்த்தி, தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் புதிய சட்டத் திருத்தத்தில் கையொப்பமிட்டாா். இதைத் தொடா்ந்து, வெனிசுலா மீதான எரிசக்தித் துறை தடைகளை தளா்த்தி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் எண்ணெய் துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த 2019-இல் வெனிசுலா- அமெரிக்கா இடையிலான தூதரக உறவுகள் முறிந்த நிலையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்டனா்.

தூதரகம் மீண்டும் திறப்பு: மடூரோ சிறைப்பிடிப்பைத் தொடா்ந்து, தற்போது இருதரப்பு உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தூதரகம் எப்போதும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கராகஸில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டுள்ளதை வெனிசுலா மக்கள் வரவேற்றுள்ளனா். இது நோ்மறையான நடவடிக்கை; வெனிசுலாவின் முன்னேற்றத்துக்கு பிற நாடுகளுடன் நல்லுறவு அவசியம் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.