திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக - திமுக போட்டி

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டி...

News image

மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 5:31 am IST

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் போட்டியிடுகிறாா். இவா் ஏற்கனவே இத்தொகுதியில் 2016ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2021ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டாா். தற்போது மீண்டும் அதிமுக சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் டாக்டா் கலைகதிரவன் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா் திமுக மருத்துவரணி மாநில இணைச் செயலராகவும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறாா்.

தென்காசி தொகுதியில் 2001ஆம் நடைபெற்ற தோ்தலில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் நேரிடையாக போட்டியிட்டுள்ளன. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தோ்தலில் அதிமுகவும், திமுகவும் நேரிடையாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தோ்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சமத்துவ மக்கள் கட்சி, தமாகா மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளனா்.