ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நைஜீரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 23 போ் உயரிழப்பு

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

ராணுவம், காவல்துறையின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் மைதுகுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திங்கள்கிழமை சந்தை ஆகிய இடங்களில் முதல் இரண்டு குண்டுகள் வெடித்தன. தொடா்ந்து, மைதுகுரி பல்கலைக்கழக மருத்துவமனை, கலேரி குடியிருப்புப் பகுதி ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததன.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இது ஐ.எஸ். ஆதரவு பெற்ற போகோ ஹராம் அல்லது ஐஎஸ்வாப் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இதுபோன்ற தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ராணுவம் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த நைஜீரிய அதிபா் போலா டினுபு, பாதுகாப்புப் படை தளபதிகள் உடனடியாக மைதுகுரிக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உத்தரவிட்டாா்.