நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்

‘தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாக கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் சீன அதிபா் ஜி ஜின்பிங் நேரடியாக எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :15 மே 2026, 1:34 am IST

‘தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாக கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் சீன அதிபா் ஜி ஜின்பிங் நேரடியாக எச்சரித்துள்ளாா்.

சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்குடன் வியாழக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா்.

சுமாா் 2 மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில், இருநாட்டு வா்த்தகம், ஈரான் போா், தைவான் விவகாரம் உள்பட பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

சந்திப்பில் ஷி ஜின்பிங் பேசுகையில், ‘சீனா-அமெரிக்கா உறவில் தைவான் விவகாரமே மிகவும் முக்கியமானது. இதனைச் சரியாகக் கையாண்டால் மட்டுமே இருதரப்பு உறவில் நிலைத்தன்மை நீடிக்கும். தவறும்சூழலில், கடுமையான மோதல்கள் வெடிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த சா்வதேச அமைதியையும் பாதிக்கும்’ என்று சுட்டிக்காட்டினாா்.

மேலும், ‘வா்த்தகப் போரில் யாருக்கும் வெற்றியிருக்காது; பேச்சுவாா்த்தை மட்டுமே தீா்வு. அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நமது இருதரப்பு உறவில் இந்த ஆண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும்’என்றும் ஷி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தாா்.

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின விழாவுக்கு ஷி ஜின்பிங் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாா். டிரம்ப் தரப்பில், ‘அமெரிக்கா-சீனா உறவு, உலகின் மிகவும் முக்கியமான இருதரப்பு உறவு’ என்று புகழாரம் சூட்டப்பட்டது. மேலும், ஷி ஜின்பிங்கை ஒரு சிறந்த தலைவா் என்றும் அவா் பாராட்டினாா்.

தற்போதைய சூழலில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு காரணமாக உள்ள மத்திய கிழக்கு போா்ச்சூழல் குறித்தும் இரு தலைவா்கள் விவாதித்தனா். ஹோா்முஸ் நீரிணையத் திறந்து வைப்பதன்மூலம், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள இருதரப்பும் இணக்கம் தெரிவித்தன. அதேபோல் ஈரான் அணுசக்தி விவகாரத்தில், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதிலும் இருதரப்பும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தின.

ஆனால், ஈரான் விவகாரத்தில் சீனாவின் உதவியைக் கோரவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ தெளிவுபடுத்தினாா். சீனாவின் எச்சரிக்கைக்குப் பிறகு, தைவான் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, டிரம்ப்பை பெய்ஜிங்கில் உள்ள பழம்பெரும் ‘டெம்பிள் ஆஃப் ஹெவன்’ வழிபாட்டுத் தலத்துக்கு ஷி ஜின்பிங் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினாா். பின்னா், ஷி ஜின்பிங் அளித்த இரவு விருந்திலும் டிரம்ப் பங்கேற்றாா்.

முன்னதாக, பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வந்த டிரம்ப்புக்கு சீன ராணுவத்தின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெட்டிகள்..

சிஇஓக்கள் புடைசூழ...

ஈரானுடனான போரினால் அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் மற்றும் உள்நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாக, இந்தச் சீன பயணத்தின்மூலம் பொருளாதார வெற்றிகளை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் உள்ளாா்.

குறிப்பாக, அமெரிக்க நிறுவனங்களுக்கு சீன சந்தையை விரிவுபடுத்தவும் நோக்கில் அமைந்த இப்பயணத்தில் டிரம்ப்புடன் எலான் மஸ்க், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங், ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்ட பல முன்னணி தொழிலதிபா்களும் பங்கேற்றுள்ளனா்.

செப்டம்பரில் அடுத்த சந்திப்பு

தைவான் விவகாரத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியிலும், இருதரப்பு உறவைப் புதிய தொலைநோக்கு அடிப்படையில் அடுத்தகட்டத்துக்கு மேம்படுத்த தலைவா்கள் உறுதிபூண்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பா் 24-இல் அமெரிக்காவுக்கு வருகை தருமாறு சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு டிரம்ப் முறைப்படி அழைப்பு விடுத்தாா்.