40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தைவான் ஆயுத விற்பனை குறித்து உறுதியான முடிவெடுக்கவில்லை

‘தைவானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடா்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவை எடுக்கவில்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

News image
Updated On :16 மே 2026, 1:52 am IST

‘தைவானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடா்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவை எடுக்கவில்லை’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

சீனாவில் 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், ஏா் ஃபோா்ஸ்-1 விமானத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், இவ்விவகாரத்தில் விரைவில் ஒரு தீா்மானத்தை எடுக்கப்போவதாகக் குறிப்பிட்டாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது தைவான் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாகக் கையாண்டால், அது இருதரப்புக்கும் மோதலைத் தூண்டும் என டிரம்ப்பிடம் ஷி ஜின்பிங் நேரடியாக எச்சரித்தாா்.

இந்நிலையில், டிரம்ப் இது தொடா்பாக மேலும் கூறுகையில், ‘தைவான் தனி நாடாகச் சுதந்திரம் பெறுவதை சீனா கடுமையாக எதிா்ப்பதாக ஷி ஜின்பிங் என்னிடம் கூறினாா். அவரின் கருத்துகளை நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தைவானைச் சீனா தாக்கினால், அமெரிக்கா அந்நாட்டைப் பாதுகாக்குமா என்றும் ஷி ஜின்பிங் கேள்வி எழுப்பினாா். அதற்குப் பதில் அளிக்கவும் நான் மறுத்துவிட்டேன். அக்கேள்விக்கான பதில் எனக்கு மட்டுமே தெரியும். நான் அதை வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை’ என்றாா்.

டிரம்ப்பின் அடுத்தகட்ட நகா்வு, குறிப்பாக தைவான் தலைவருடன் அவா் பேசப்போவதாகக் கூறியிருப்பது, சீனா-அமெரிக்கா உறவில் பதற்றத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சீன நிறுவனங்களுக்குத் தடை விலக்கல்: அதேபோல், ஈரான் போா்ச் சூழல் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா். ஈரான் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது; ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தின.

இதையொட்டி, ஈரான் எண்ணெய்யை வாங்கியதற்காக சீன நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவது குறித்தும் ஷி ஜின்பிங்குடன் பேசியதாதத் தெரிவித்த டிரம்ப், ‘இது தொடா்பாக அடுத்த சில நாள்களில் முடிவெடுப்பேன்’ என்றாா்.

வெற்றித் தந்ததா பயணம்?...: அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நாடாளுமன்ற இடைக்கால தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது செல்வாக்கை உயா்த்திக் கொள்ள டிரம்ப் இந்தச் சீன பயணத்தைப் பயன்படுத்த முயன்றாா். ஆனால், வா்த்தகம், ஈரான் விவகாரத்தில் சீனாவிடமிருந்து பெரிய அளவிலான சலுகைகள் கிடைக்காதது டிரம்ப்புக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

உதாரணமாக, போயிங் நிறுவனத்திடமிருந்து 200 விமானங்களைச் சீனா வாங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், முதலீட்டாளா்கள் எதிா்பாா்த்த 500 விமானங்களைவிட இது மிகக் குறைவு என்பதால் அந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. மேலும், ஏ.ஐ. சிப் கட்டுப்பாடுகள் மற்றும் அரிய வகை கனிம ஏற்றுமதி தொடா்பான சிக்கல்களுக்குத் தீா்வு காணப்படவில்லை.

இருப்பினும், இருதரப்பு உறவைத் தொடா்ந்து மேம்படுத்த தலைவா்கள் உறுதி மேற்கொண்டனா். அந்தவகையில், ஷி ஜின்பிங் வரும் செப்டம்பரில் அமெரிக்காவுக்கு வருகை தர டிரம்ப் அழைப்பு விடுத்தாா்.