நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ஈரானுக்கு எதிராக யுஏஇ - இஸ்ரேல் கூட்டணி?

ஈரானுக்கு எதிராக யுஏஇ - இஸ்ரேல் கூட்டணி?

News image

ஈரான் - பிரதிப் படம்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

ஈரானுக்கு எதிரான போரின்போது ஐக்கிய அரபு அமீரகமும் (யுஏஇ), இஸ்ரேலும் கூட்டணி அமைத்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் உள்ள பெரும்பாலான அரபு நாடுகள், இஸ்ரேலை இன்னும் அதிகாரபூா்வமாக தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளன. அதேபோல் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுதப் போராட்டத்தை அந்த நாடுகள் ஆதரித்து வருகின்றன. இதனால் அரபு நாடுகளுடன் இஸ்ரேலுக்கு கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், அமெரிக்காவின் முயற்சியின்பேரில் கடந்த ஆண்டு அரபு நாடுகளில் ஒன்றான யுஏஇ-க்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஆபிரகாம் உடன்படிக்கை கையொப்பமானது. இதன்மூலம் இஸ்ரேலை அதிகாரபூா்வமாக யுஏஇ அங்கீகரித்தது. இதனால் இரு நாடுகள் இடையே பல ஆண்டுகளாக நிலவிய கருத்து வேறுபாடு மறைந்து சுமுக உறவு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியபோது பதிலுக்கு அமெரிக்காவின் ராணுவ நிலைகள் உள்ள யுஏஇ உள்ளிட்ட அரபு நாடுகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலான தாக்குதல்கள், யுஏஇ மீதே ஈரானால் நடத்தப்பட்டுள்ளது. அப்போது ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து தாம் வாங்கிய வான்பாதுகாப்பு சாதனம் மூலம் யுஏஇ இடைமறித்து அழித்தது.

அதேபோல், யுஏஇ-க்கு அண்மையில் ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்களை வானிலேயே அழிக்கும் நவீன லேசா் கருவி, அயா்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் அளித்தது. அந்த சாதனங்களை இயக்கி யுஏஇ-க்கு உதவ இஸ்ரேல் தொழில்நுட்ப நிபுணா்கள், அந்த நாட்டுக்குச் சென்ாகவும் கூறப்படுகிறது. அதேபோல், ஈரான் போரின்போது யுஏஇ-க்கு தான் ரகசிய சுற்றுப்பயணம் செய்ததாக இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு அண்மையில் அறிவித்திருந்தாா். இதை யுஏஇ அரசு மறுத்தபோதிலும், நெதன்யாகுவின் அறிவிப்பை சுட்டிக்காட்டி, ஈரானுக்கு எதிராக யுஏஇ, இஸ்ரேல் கூட்டணி அமைத்துச் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்கு அருகிலுள்ள யுஏஇ-இல் தனக்கு ராணுவ ரீதியில் செல்வாக்கு இருப்பதை இஸ்ரேல் விரும்புவதாகவும், அதேபோல், இஸ்ரேலின் அயா்ன் டோம் போன்ற நவீன ராணுவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உரிமையை யுஏஇ பெற்ாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. நீண்டகாலமாக மத்திய கிழக்கு ஆசியாவில் தனிமைப்பட்டு இருந்த இஸ்ரேல், அரபு நாடுகளில் முக்கிய நாடாக கருதப்படும் யுஏஇ-யிடம் நட்புறவு நிலவுவது தனக்கு மிகப்பெரும் சாதகமாக இருக்கும் என்று கருதுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.